/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
12 ரோடுகளில் 'ஒரு நாள் ரோடு திட்டம்'
/
12 ரோடுகளில் 'ஒரு நாள் ரோடு திட்டம்'
ADDED : ஏப் 24, 2025 05:47 AM
மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, நேதாஜி ரோடு (கே.பி.எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோயில் வரை), டி.பி.கே., (கே.பி.எஸ்., ரவுண்டானா முதல் ஜம் ஜம் வரை) டவுன்ஹால், தெற்குமாசி (விளக்குத்துாண் முதல் மறவர் சாவடி, டி.எம்.கோர்ட்), மேலமாசி, தெற்காவணி மூல வீதி, கீழமாசி வீதி (லெமன் மார்க்கெட் -அம்மன் சன்னதி, விளக்குத்துாண் சந்திப்பு வரை), மேல ஆவணி முதல் தெரு, மேலமாசி வீதி, வடக்கு மாரட் வீதி (மே பிளவர் சந்திப்பு முதல் மேலமாசி -வடக்கு மாசி வீதிசந்திப்பு முதல் தளவாய் தெரு சந்திப்பு) என 12 ரோடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்த ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்றி வாகனங்கள் தடையின்றி செல்லவும், சிரமமின்றி நடக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ரோடுகளில் வணிக நிறுவன உரிமையாளர்கள் வணிக பொருட்களை நடைபாதையில் குவித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க நகர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

