ADDED : மார் 03, 2026 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார் 54. பழம் வியாபாரம் செய்து வந்தார்.
இவரும், திருப்பதி என்பவரும் டூவீலரில் திருமங்கலத்திற்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க பிப்.27 சென்றனர். பின்னர் மதுரை- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் கொட்டாணிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் கீழே இறங்கும் போது நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் கீழே விழுந்தார். இதில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

