/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டூவீலர் -- லோடு வேன் மோதலில் ஒருவர் பலி
/
டூவீலர் -- லோடு வேன் மோதலில் ஒருவர் பலி
ADDED : பிப் 18, 2026 06:45 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியைச் சேர்ந்த சிவராமன் மகன் சஞ்சய் 22. கல்லுாரி படிப்பை முடித்திருந்தார். இதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் விஜயராமன் 25. வட மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.
மகாசிவராத்திரி வழிபாட்டுக்கு ஊருக்கு வந்துள்ளார். இருவரும் நேற்று உசிலம்பட்டிக்கு வந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மாசிப்பெட்டி திரும்பும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு இரவு 8:00 மணியளவில் டூவீலரில் ஊர் திரும்பினர்.
பேரையூர் ரோட்டில் போத்தம்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே உசிலம்பட்டியை நோக்கிவந்த லோடுவேன் மோதியதில் சஞ்சய் அதே இடத்தில் பலியானார்.
விஜயராமனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

