தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போன் போதுமே..

ஒரு போன் போதுமே..

ஒரு போன் போதுமே..


ADDED : ஏப் 08, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழாய் பதிக்கவில்லை

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டில்பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாய் பதித்த நிலையில் மதர்தெரசா பள்ளி ரோட்டில் ரேணுகா அம்மன் கோயில் தெருவில் மட்டும் எந்த பணியும் நடக்காமல் உள்ளது.

- கே.ஆர்.குமார்மேலஅனுப்பானடி

அடிப்படை வசதி வேண்டும்

விளாங்குடி பகுதி மீனாட்சி நகர் வருமானவரி முதல்தெருவில் ரோடு, பாதாளச்சாக்கடை, மழைநீர் வடிகால் வசதி இன்றி வசிக்கிறோம். குப்பையை எடுக்க ஆட்கள் வருவதில்லை. அருகில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளது.

- - பாண்டியராஜன், விளாங்குடி

கால்வாய் துார்வாரப்படுமா

மதுரை வல்லபாய் பகுதி குடியிருப்பை மெயின் ரோட்டில் இணைக்கும் பாலம் உள்ளது. பாலத்தின்அடியே வாய்க்கால் வழியே தல்லாகுளம் பெருமாள் கோயில் குளத்திற்கு நீர் திறந்துவிடப்படுகிறது. அதில் குப்பை, கழிவுநீர், தேங்குகிறது. 2 ஆண்டாக துார்வாரப்படவில்லை. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

-- நாகராஜன், வல்லபாய் ரோடு

ஆக்கிரமிப்பு கடைகள்

மதுரை வார்டு எண் 47ல் சின்னக்கடை வீதி முழுவதும் பூ, பழம் கடைகள் வைத்துள்ளனர். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அகற்ற வேண்டும்.

- அசோக், தெற்குவாசல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us