தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போன் போதுமே..

ஒரு போன் போதுமே..

ஒரு போன் போதுமே..


ADDED : மே 06, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரங்கள் பாதிப்பு

செல்லுார் கண்மாயில் குப்பை கொட்டப்பட்டு சமூக விரோதிகளால் எரிக்கப்படுகிறது. அருகே அரசமரம் நெருப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -ஆதி, செல்லுார்

கழிவுநீர் தேக்கம்

கோவில் பாப்பாகுடி சத்யா நகரில் குப்பை குவியலாக உள்ளது. கழிவுநீர் நிரம்பி தேங்கியுள்ளது. புகார் அளித்தால் தற்காலிமாக சுத்தம்செய்கின்றனர். நிர்வாகிகளால் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக மாறிவிட்டது. சுகாதார சீர்கேடாகி மக்கள் பெரும் துயரப்படுகிறோம்.

- -ராஜசேகரன், கோவில் பாப்பாகுடி

வாய்க்காலில் குப்பை

மதுரை நரசிம்மபுரம் பனையூர் வாய்க்காலில் அப்பகுதி குடியிருப்போர் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர். பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. வாய்க்கால்கரையிலும் குப்பையை கொட்டுகின்றனர். காற்று மாசுபாட்டுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.

- - செல்வராஜ், நரசிம்மபுரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us