தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!


ADDED : ஆக 22, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெருநாய் தொல்லை

மதுரை துரைசாமிநகர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை கும்பலாக துரத்துகின்றன. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கரராமன்துரைசாமிநகர்

மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா

சமயநல்லுார் வைரவநத்தம் ஊராட்சிக்குட்பட்ட டிரான்ஸ்பார்மர் குப்பை, விறகுக் கட்டைகளால் சூழப்பட்டுள்ளது. மின்வாரியம் மின்விபத்து ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பால்வண்ணன், வைரவநத்தம்

கழிவுநீர் கசிவு

மதுரை எச்.எம்.எஸ்., காலனி குடிநீர் தொட்டி அருகில் கழிவுநீர் கசிந்து வீடுகளின் முன்பு தேங்கி கிடக்கிறது. நோய் தொற்று அபாயம் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தர் கிருஷ்ணன்எச்.எம்.எஸ்., காலனி

போக்குவரத்து நெரிசல்

மதுரை-அலங்காநல்லுார், அ.புதுப்பட்டி வழியாக செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வருவதில்லை. வெளியிலேயே இறக்கி, ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அருண், அலங்காநல்லுார்

சேதமடைந்துள்ள மேன்ஹோல்

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள மேன்ஹோல் சேதமடைந்து, அதன் முனைகள் வளைந்து உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அஜித், கீழவாசல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us