தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரு போன் போதுமே..!

 ஒரு போன் போதுமே..!

 ஒரு போன் போதுமே..!


ADDED : ஏப் 07, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* மூடப்படாத பள்ளம் மதுரை விஸ்வநாதபுரம் மருதுபாண்டியர் 3வது குறுக்குத்தெருவில் குடிநீர் இணைப்புக்காக தோண்டிய பள்ளம் மூடப்படவில்லை. குழந்தைகள் தவறி பள்ளத்தில் விழும் வாய்ப்பு அதிகமுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமரவேலு, விஸ்வநாதபுரம்.

* குடிநீர் இல்லை மதுரை எல்லீஸ் நகர் பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் உடைந்து அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. இதனால் குடியிருப்போர் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - யோகநந்தன், எல்லீஸ் நகர்.

* கழிவுநீர் வெள்ளம் மதுரை மாட்டுத்தாவணி பிரஸ் காலனி பகுதியில் 5 நாட்களாக கழிவுநீர் வடிகால் நிரம்பி வழிகிறது. ரோட்டில் கழிவுநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.

- - கார்த்தி, மாட்டுத்தாவணி.

* சுவாசக் கோளாறு சோழவந்தான் தென்கரை நிலையூர் கால்வாய் பாலம் அருகில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - கவுரிநாதன், சோழவந்தான்.

* தார் ரோடு வேண்டும் மதுரை தெற்குவாசல் பாலத்தின் கீழ்ப்பகுதி சர்வீஸ் ரோடு மேடு, பள்ளமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் தடுமாறி விழுகின்றன. இங்கு தார் ரோடு அமைக்க வேண்டும்.

- நடராஜன், வில்லாபுரம்.

* எங்கே குடிநீர் மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவஹர் தெரு பகுதியில் குடிநீர் இல்லாமல் 2 வாரங்களாக மக்கள் தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - நடராஜன், எஸ்.எஸ்.காலனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us