ADDED : ஏப் 22, 2026 06:02 PM
* தேங்கும் கழிவுநீர் மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் குடியிருப்போர் நேரடியாக பாதிக்கின்றனர். மாநகராட்சியில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- ரமேஷ், எஸ்.எஸ்.காலனி.
* வெறிச்சோடிய கண்மாய் மதுரை பூதக்குடி கண்மாய் நீர் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் காலத்தில் பறவைகள், விலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், வாடிப்பட்டி.
* வீணாகும் குடிநீர் மதுரை மேலப்பொன்னகரம் 8 வது தெருவில், குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- யோகநாதன், எல்லீஸ் நகர்.
* தெருநாய்கள் தொல்லை மதுரை காளவாசல் சிக்னல் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்வோரை கும்பலாக துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதிவாணன், காளவாசல்.
* ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை தெற்குவாசல் சின்னக்கடை தெரு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களால் ரோடு சுருங்கி விட்டது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உரிய அனுமதி இல்லாமல் ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அப்துல், தெற்குவாசல்.
* போக்குவரத்து நெரிசல் மதுரை செனாய் நகர் ரோட்டில் அதிவேக இருசக்கர வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வயதானோர் ரோட்டில் நடக்கவே பயப்படுகின்றனர். அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணப்பன், செனாய் நகர்.
* ரோடெங்கும் சாக்கடை மதுரை தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே ஏற்பட்டுள்ள சாக்கடை அடைப்பால் ரோடெங்கும் கழிவுநீர் வெள்ளமாக ஓடுகிறது. இப்பகுதியில் வசிப்போர் சுகாதார கேடுக்கு ஆளாகின்றனர். பத்து நாட்களுக்கு மேலாகியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
- கார்த்திகேயன், தெற்குவாசல்.
* சாக்கடை அடைப்பு மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாக்கடை அடைப்பால் ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்போருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சத்யா, சின்னசொக்கிக்குளம்.
* அடிக்கடி விபத்து பழைய குயவர்பாளையம் பகுதி ரோடு பழுதடைந்துள்ளதால், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகார்ஜூன், பழையகுயவர் பாளையம்.
