UPDATED : ஆக 31, 2026 06:57 PM
ADDED : ஆக 31, 2026 06:51 PM
* மதுரை நரிமேடு பகுதியில் ரோட்டில் இரவில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் இவ்வழியே செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- மோகன், நரிமேடு.
* தெருநாய் தொல்லை மேலுார் தாலுகா அலுவலகம் அருகே தெருநாய்கள் அதிகமாக திரிகின்றன. தனியாக செல்வோரை துரத்துகின்றன. அரசு அலுவலகம் வருவோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
- - விக்னேஷ், மேலுார்.
* தேங்கும் தண்ணீர் மதுரை நடராஜ் நகர் சர்ச் ரோடு சந்திக்கும் ரோட்டில் குடிநீர் குழாய்க்காக தோண்டி பள்ளத்தை மூடாமல் சென்றுவிட்டனர். இதனால் பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. பள்ளி மாணவர்கள் செல்லும் ரோடு என்பதால், விபரீதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பீட்டர், நடராஜ் நகர்.
* வாகன நெரிசல் மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி பகுதியில் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனஓட்டிகள் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றனர்.
-- தெய்வம், தெற்குவாசல்.
* கொசுத்தொல்லை மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுடர்விழி, ஆரப்பாளையம்.
