ADDED : செப் 28, 2026 07:43 PM
* ஆபத்தான டிரான்ஸ்பார்மர் மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் சுற்றி அருகில் உள்ள செடியின் கொடி படர்ந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- – சுப்பிரமணியன், எஸ்.எஸ்.காலனி.
* சாக்கடையால் அவதி மதுரை அவனியாபுரம் குருதேவ் நகரில் ரோட்டின் இருபுறமும் சாக்கடை ஓடுகிறது. சாக்கடை முழுமையாக மூடப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியினர் சுகாதாரக்கேட்டிற்கு மத்தியில் தவிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– - ராதாகிருஷ்ணன், குருதேவ் நகர்.
* ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை தெற்குவாசல் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- – அப்துல், தெற்குவாசல்.
* எரியாத மின்விளக்கு மதுரை கே.கே. நகர் ஆவின் ரவுண்டானா பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு 3 மாதமாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்குமோ
-– சுபாஷ், கே.கே.நகர்.
* குப்பையால் குமுறல் கோவில்பாப்பாகுடியில் போதுமான அளவில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்படாததால் மக்கள் பொதுஇடத்தில் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- – பைரவிதேவி, கோவில்பாப்பாகுடி.
