sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒருபோன் போதுமே

/

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே


ADDED : பிப் 08, 2024 04:48 AM

Google News

ADDED : பிப் 08, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதை வேண்டும்

மதுரை காளவாசல் வழியாக தேனி மெயின்ரோட்டில் விராட்டிபத்து செல்லும் ரோட்டில் எந்த பணியும் நடக்கவில்லை. ஆனால் பாதை அடைக்கப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெருக்கடியை போக்க திறந்துவிட வேண்டும்.

- பாலகுரு, கோச்சடை

மோசமான ரோடு

மதுரை மேலமாரட் வீதி விடுதி ரோட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.பிரபா, மதுரை-1

ஒரே தெருவுக்கு இரண்டு பெயர்

மதுரை அய்யர்பங்களா சர்ச்சை ஒட்டியுள்ள பெயர் பலகையில் புனிதபீட்டர் சர்ச் சாலை என உள்ளது. தெருவின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணா நகர் 2வது தெரு என உள்ளது. எது உண்மையான பெயர் என குழப்பம் ஏற்படுகிறது. தெருவிற்கு சரியான பெயர் வைக்க வேண்டும்.

- மகாலிங்கம், திருப்பாலை

பள்ளமான ரோடு

மதுரை வைகை வடகரை பெருமாள் கோயில் ரோட்டில் ஏராளமான பள்ளங்கள் உள்ளன. ரோட்டை சரிசெய்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை வேண்டும்.

- மோகன், சந்தைப்பேட்டை

ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்

மதுரை கோச்சடை முத்தையா கோயில் 2வதுதெருவில் புதிய ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில இடங்களில் குறுகிய சாலையாக உள்ளது. ஆக்கிரமிப்புக்களை அகற்றி அகலமான ரோடுகள் அமைக்க வேண்டும்.

-எம்.கருப்பையா, கோச்சடை

தெருவில் குப்பை

மதுரை கே.கே. நகர் முதல் தெருவில் கிராஸ் ரோட்டில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் மலை போல் உயர்ந்து காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாரதா, கே.கே.நகர்

ரோட்டில் மாடுகள்

மதுரை மாநகராட்சி47 வது வார்டு தெற்கு மாரட்வீதி தெற்குவாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் மாடுகள் ஏராளமாக சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

-ஸ்ரீராம்சந்தர், தெற்குவாசல்






      Dinamalar
      Follow us