sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒருபோன் போதுமே

/

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே

ஒருபோன் போதுமே


ADDED : மார் 11, 2024 06:14 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணாகும் குடிநீர்

* மதுரை விராட்டிபத்து தேனி ரோடு ஜெய்நகர் முதல் தெருவில் மாநகராட்சி பைப் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும்.

- ஜெய், விராட்டிபத்து.

----

* ரோட்டில் கழிவுநீர்

* மதுரை மாநகராட்சி 22வது வார்டு மீனாட்சி நகர் 5வது தெரு பகுதியில் ரோடு மற்றும் காலி பிளாட்களில் 3 மாதங்களாக கழிவு நீர் நிரம்பி வழிவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கமல், விளாங்குடி.

* கழிவுநீர் தேக்கம்

மதுரை செல்லுார் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் வெகுகாலமாக ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை தேவை.

- சங்கரபாண்டியன், செல்லுார்.

* நாய்கள் தொல்லை

மதுரை ஷெனாய் நகரில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் மாணவர்கள் பள்ளி செல்ல அச்சப்படுகின்றனர். இரவில் டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீ.கணேஷ், ஷெனாய் நகர்.

* வாய்க்கால் அடைப்பு

மதுரை மாநகராட்சி 57வது வார்டு எம்.எஸ்.மஹால் அருகே வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சண்முகசுந்தரம், ஞானஒளிவுபுரம்.

* புதிய ரோடு வேண்டும்

மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர் பிரதான சாலை மற்றும் அருகில் உள்ள வீதிகளில் ரோடு மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- ஹரிஷ் முத்துராமசாமி, துரைச்சாமி நகர்.






      Dinamalar
      Follow us