தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரத்தத் தட்டணுக்களை மட்டும் தானம் செய்யலாம்

ரத்தத் தட்டணுக்களை மட்டும் தானம் செய்யலாம்

ரத்தத் தட்டணுக்களை மட்டும் தானம் செய்யலாம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘ரத்தத்தை தானம் செய்வது போல ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை மட்டும் தானம் செய்யலாம்’’ என மாவட்ட நிர்வாகம், மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் நடந்த குருதி கொடையாளர்கள் விழாவில் ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தியா தெரிவித்தார்.

ரத்ததானம் செய்த அமைப்புகள், தனிநபர்கள் என 160 பேர், ரத்தத் தட்டணுக்கள் தானம் செய்தோர், அரிய வகை பாம்பே ஓ குரூப் ரத்த கொடையாளர்களுக்கு கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். டீன் அருள் சுந்தரேசன் குமார், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமச்சந்திரன், துணை இயக்குநர் பொற்செல்வன், முதன்மை கல்வி அலுவலர் தயாளன் கலந்து கொண்டனர்.

டாக்டர் சிந்தியா கூறியதாவது: அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் 2025ம் ஆண்டில் 30ஆயிரத்து 408 யூனிட்களும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்தவங்கி சேர்த்து 31ஆயிரத்து 982 யூனிட்கள் ரத்தம் தானமாக பெற்றுள்ளோம். இந்தாண்டு செப்., வரை மதுரையில் 21 ஆயிரத்து 456 யூனிட், உசிலம்பட்டியைச் சேர்த்து 23 ஆயிரத்து 91 யூனிட்கள் ரத்தம் தானமாக பெற்றுள்ளோம். கர்ப்பிணிகள், புற்றுநோயாளிகளுக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ரத்தம் ஏற்றுவதை விட தட்டணுக்களை நேரடியாக செலுத்துவது உடனடி பலன் தரும்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணு, தட்டணுக்கள், வெள்ளையணு, பிளாஸ்மாவை பிரிப்பதற்கான இயந்திரம் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளது. ரத்ததானம் செய்வோரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்று அதை இயந்திரத்தில் செலுத்தி தட்டணுக்களை மட்டும் பிரித்து எடுத்து விட்டு மீண்டும் ரத்தத்தை கொடையாளருக்கே செலுத்தி விடுவோம். ரத்தக்கொடையாளருக்கு 48 மணி நேரத்தில் தட்டணுக்கள் உற்பத்தியாகி அடுத்த தானத்திற்கே தயாராகி விடலாம். இந்த முறையில் பெறப்படும் தட்டணுக்கள் அதிகளவில் இருப்பதால் நோயாளிக்கு ஒரே முறை செலுத்த முடியும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us