ADDED : நவ 17, 2024 06:12 AM

மதுரை: ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பில் கோவையில் தென்னிந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி நடந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். மதுரையில் இருந்து ஜி தொக்குக்காய் பள்ளி மாணவர்கள் மாவட்ட செயலாளர் கவுரிசங்கர் தலைமையில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
ஆறு வயது கட்டா பிரிவில் ஸ்ரீநிதி வெண்கலம், 7 வயது சித்தார்த் வெள்ளி, யாழ்வேந்தன் வெண்கலம், 8 வயது பிரிவில் அபினேஷ் வெள்ளி பதக்கம், 9 வயது பிரிவில் யாத்ரா தங்கம், ஹரிசரண் வெள்ளி, பவானி தங்கப்பதக்கம் வென்றனர்.
10 வயது பிரிவில் எப்ரன், ஸ்ரீஹரி பிரசன்னா, லக் சிதா தங்கம் வென்றனர். 11 வயது பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், நந்திதா தங்கம், 12 வயது பிரிவில் கவினேஷ், ஸ்ரீஹரி வெண்கலம், ஜீவிதா தங்கம், ரோஜா வெண்கலம் வென்றனர்.
கருப்பு பட்டை பிரிவில் யோகேஷ் தங்கம், ஸ்ரீஷ்ரவன் வெள்ளி, கவின் நரசிம்மன் வெண்கலம் வென்றனர். சண்டை பிரிவில் சாதனா, லக் சிதா தங்கம் வென்றனர். ஹரிஷ் குமார், யாத்ரா, எப்ரான் வெள்ளிப்பதக்கம், விக்னேஷ்வரன், ஜீவிதா, யாழ், பிரஜன் வெண்கலம் வென்றனர். அகில இந்திய தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் முத்துராஜூ, பயிற்சியாளர்கள் பாராட்டினர்.