ADDED : ஜன 17, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்கள், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதி கண்மாய்கள் வைகை தண்ணீரால் நிரம்பும்.
இந்தாண்டு வைகை அணை ஆற்றுப்பகுதியில் தொடர் மழை பெய்ததால், இந்த மழைநீர் கண்மாய்களுக்கு திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்திலுள்ள விளாச்சேரி, பாணாங்குளம், சேமட்டான்குளம், செவ்வந்திகுளம், குறுக்கட்டான், நிலையூர் பெரிய கண்மாய்கள் ஏற்கனவே நிரம்பி உள்ளன.
பின்பு கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதனால் அக்கண்மாய்க்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டு, கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாயில் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.