ADDED : ஏப் 20, 2025 04:10 AM
நாகமலை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. நிர்வாக அலுவலக கட்டடத்தை நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், மாணவர் நல நிதித்துறை அலுவலகத்தை செயற்குழு உறுப்பினர் அண்ணாமலையான் திறந்து வைத்தனர்.
இயற்கை பயிலகம் மற்றும் யோகா பயிற்சியகத்தை செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், முதுநிலை ஆராய்ச்சித்துறை ரசாயனவியல் ஆய்வகக் கூடம், தரவு சேமிப்பு நிலைய கட்டடத்தை விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகத்தின் தலைவர் செல்வராஜன், செயலாளர் போஸ், இளங்கலை விலங்கியல் துறை ஆய்வகக் கூடத்தை செயற்குழு உறுப்பினர் அறிவழகன் திறந்து வைத்தனர். விரிவுபடுத்தப்பட்ட உயிரின அருங்காட்சியகத்தை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், முதுநிலை ஆராய்ச்சி வரலாற்றுத்துறை ஆற்றல் அரங்கத்தை செயற்குழு உறுப்பினர் சிவபிரான் திறந்து வைத்தனர்.
நாடார் மஹாஜன சங்க தலைவர் குருசாமி வெள்ளையன், பொருளாளர் பாண்டியன், கல்லுாரி தலைவர் அசோகன், தாளாளர் சுந்தர், துணைத்தலைவர் பொன்னுச்சாமி, இணைச்செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் நல்லதம்பி, காமராஜ் தொழில்நுட்பக் கல்லுாரி பரிபாலன சபை தலைவர் (பொறுப்பு) வனராஜன், செயலாளர் (பொறுப்பு)விவேகானந்தன் பங்கேற்றனர்.
முதல்வர் (பொறுப்பு) ராமமூர்த்தி, துணை முதல்வர் செல்வமலர், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஸ்ரீதர், பொருளியல் துறைத்தலைவர் பிரெட்ரிக் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

