நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் நகராட்சியில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி தலைவர் முகமது யாசின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேலுார் அரசு மருத்துவமனையில் தங்கும் விடுதி, நகர்புற நலவாழ்வு மையம், சமுதாய கழிப்பிடம் உள்ளிட்டவற்றை நேரில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் இளஞ்செழியன், நகராட்சி கமிஷனர் கணேசன், டாக்டர்கள் ஜெயந்தி, செந்தில்குமரன் கலந்து கொண்டனர்.

