ADDED : ஏப் 11, 2026 09:40 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தெற்கு தொகுதி பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார். பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் ராமஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார்.
மாநில தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் கே.டி.ராகவன், நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி, அ.தி.மு.க., துணைச் செயலாளர் ராஜா, பகுதி செயலாளர் குமார், த.மா.கா., மாவட்ட தலைவர் நடராஜன், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் நாகலிங்கம் பங்கேற்றனர்.
