/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
/
நவீன கண் சொட்டு மருந்து ஆலை திறப்பு
ADDED : அக் 06, 2025 04:31 AM
மதுரை : மதுரை வீரபாஞ்சானில் உள்ள அரவிந்த் கண்பராமரிப்பு குழுமத்தின் அங்கமான 'ஆரோலேப்' நிறுவனத்தில் புதிய கண் சொட்டு மருந்து உற்பத்தி ஆலை திறப்பு விழா நடந்தது.
தற்சார்பு பாரதம் இலக்கை வலுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 3 கோடியே 60 லட்சம் மருந்து பாட்டில்களை உற்பத்தி செய்ய முடியும்.
விழாவில் தேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''ஆரோலேப் தொடர்ந்து தரமான கண்மருந்து தொடர்பான பொருள் உற்பத்தியில் உலகளாவிய தர நிர்ணயங்களை அமைத்து வருகிறது. குறைவான விலையில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வது பாராட்டத்தக்கது'' என்றார்.
'எமிரிட்டஸ்' துணைத்தலைவர் டாக்டர் நாச்சியார், ஆரோலேப் தலைவர் டாக்டர் துளசிராஜ், அரவிந்த் ஐ கேர் சேர்மன் டாக்டர் ரவீந்திரன், ஆரோலேப் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம், முன்னாள் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், திட்ட இயக்குனர் டாக்டர் அரவிந்த் சீனிவாசன், வேலம்மாள் குழும நிறுவனர் முத்துராமலிங்கம் பேசினர்.