ADDED : ஜன 15, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் விஷ்ணு நகரில் ரூ.24 லட்சத்தில் நகராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடந்தது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடிக்க ஆரம்பித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷ்னர் ஆறுமுகம் பூங்காவை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அப்பகுதியினர் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.