ADDED : அக் 07, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் ரூ.9.23 கோடியில் அவசர சிகிச்சை மையம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக பூட்டி கிடந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் செல்வராஜ், நகராட்சி தலைவர் முகமது யாசின், சி.எம்.ஓ., ஜெயந்தி, டாக்டர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.