ADDED : செப் 18, 2026 12:52 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: கச்சைகட்டியில் கல்குவாரி அமைப்பதற்கானபொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
மதுரை ஆர்.டி.ஓ., கருணாகரன் தலைமை வகித்தார். தாசில்தார் சுந்தரவேல், சுற்றுச்சூழல் பொறியாளர் கிரிஜாதேவி முன்னிலை வகித்தனர்.பொதுமக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பாகவும் கருத்துகளை கூறினர். அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. துணைத் தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஓ., சதீஷ்குமார் பங்கேற்றனர்.
