/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்திரை திருவிழாவில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
/
சித்திரை திருவிழாவில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
ADDED : ஏப் 02, 2025 03:24 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28 தொடங்கி மே 10 வரை நடக்கவிருக்கிறது.
மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மே 8ல் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் மாநிலத் துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கூறியதாவது: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கட்டணச் சீட்டு வழங்குவதில் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம். சீட்டு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும். முக்கிய திருவிழாக்களில் கட்டணம் வசூலிப்பது பக்திக்கு புறம்பானது, என்றார்.

