/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்த எதிர்பாப்பு
/
மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்த எதிர்பாப்பு
மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்த எதிர்பாப்பு
மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்த எதிர்பாப்பு
ADDED : ஜூலை 07, 2025 02:29 AM
மதுரை : 'ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா' என மூத்த குடிமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் மேல் மூத்த குடிமக்கள் உள்ளனர். ரயில்வே விதிமுறைப்படி 60 வயது கடந்த ஆண்கள், 58 வயது கடந்த பெண்கள் மூத்த குடிமக்களாக கருதப்படுவர். இவர்கள் ரயிலில் பயணிக்க, பெண் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம், ஆண்களுக்கு 40 சதவீதம் அடிப்படைக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.
கொரோனாவின் போது சிக்கன நடவடிக்கையாக மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் மூலம் ரயில்வேக்கு வருமானம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கிய கட்டணச் சலுகை தற்போது வரை மீண்டும் அமல்படுத்தப்படவில்லை.
தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறுகையில், ''2009 முதல் வழங்கி வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை ஆன்மிக சுற்றுலா செல்லவும், மருத்துவ சிகிச்சை பெற வெளியூர்களுக்கு சென்று வரவும், பேருதவியாக இருந்தது. மூத்த குடிமக்கள் நலன் கருதி இச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்'' என்றார்.