sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிறந்த தேதியால் 32 ஆண்டுகளுக்கு பின் சர்ச்சை: வி.ஏ.ஓ.,விற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவு

/

பிறந்த தேதியால் 32 ஆண்டுகளுக்கு பின் சர்ச்சை: வி.ஏ.ஓ.,விற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவு

பிறந்த தேதியால் 32 ஆண்டுகளுக்கு பின் சர்ச்சை: வி.ஏ.ஓ.,விற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவு

பிறந்த தேதியால் 32 ஆண்டுகளுக்கு பின் சர்ச்சை: வி.ஏ.ஓ.,விற்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவு


ADDED : ஏப் 19, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பணியில் சேர்ந்த 32 ஆண்டுகளுக்கு பின் பிறந்த தேதியை பணிப் பதிவேட்டில் மாற்றம் செய்யக் கோரிய விவகாரத்தில் வி.ஏ.ஓ.,விற்கு ஓராண்டிற்குரிய ஓய்வூதிய பலன்களை நிராகரித்ததை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

மதுரை மாவட்டம் பெரியபூலாம்பட்டி மார்க்கண்டன் தாக்கல் செய்த மனு:

நான் முத்துநாகையாபுரத்தில் 1983 ல் தலையாரியாக நியமிக்கப்பட்டேன். 1961 மார்ச் 23 ல் பிறந்ததற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தேன். ஆனால் எனது பணிப் பதிவேட்டில் 1961 க்கு பதிலாக 1958 ஜன.,28 என பதிவு செய்யப்பட்டது. இத்தவறு எனக்கு 2015 ல் தெரியவந்தது. பிறந்த தேதியை பணிப் பதிவேட்டில் மாற்றம் செய்ய பேரையூர் தாசில்தாரிடம் மனு அளித்தேன். இக்கோரிக்கையை பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 32 ஆண்டுகளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி தாசில்தார் நிராகரித்தார். கலெக்டரிடம் 2016 ல் மனு அளித்தேன்.

வி.ஏ.ஓ.,வாக 2016 ல் எனக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2018 ஏப்.,30 வரை அப்பணியில் தொடர்ந்தேன். வி.ஏ.ஓ..,வாக நியமித்ததை உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., 2018 ஏப்.30 ல் நிராகரித்தார். இதற்கு எதிராக 2018 ல் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். தனி நீதிபதி 2018 ல் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தேன். விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'மனுதாரர் 1961 உண்மையான பிறந்த தேதியின்படி தனது பிறந்த தேதியை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதன்படி அவர் ஓய்வு பெறும் வரை பணியில் தொடர உரிமை உண்டு. மனுதாரரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்' என 2019 மார்ச் 5 ல் உத்தரவிட்டது. மீண்டும் பணியில் அனுமதிக்கப்பட்டேன்.

2019 மார்ச் 31 ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். 2018 பிப்.,1 முதல் 2019 மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் பணியை வரன்முறை செய்யவில்லை; பணி செய்யவில்லை என்பதால் சம்பளம் இல்லை என்ற கருத்துப்படி அக்காலகட்டத்திற்குரிய ஓய்வூதிய பலன்களை நிராகரித்து தாசில்தார் உத்தரவிட்டார். இது ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவிற்கு எதிரானது. தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வட்டியுடன் ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பட்டு தேவானந்த்: மனுதாரர் 2018 பிப்.,1 முதல் 2019 மார்ச் 18 வரையிலான காலகட்டத்தில் 'பணி செய்யவில்லை; சம்பளம் இல்லை' என்ற கருத்துப்படி பணிபுரியவில்லை என்பதால், வி.ஏ.ஓ.,பதவியில் ஓய்வூதிய சலுகை பெறுவதற்காக அவரது சம்பளம் பெயரளவில் நிர்ணயிக்கப்பட்டது என்பது அரசு தரப்பின் வாதம். இது சட்டப்படி ஏற்புடையதல்ல. அக்காலகட்டத்தில் வி.ஏ.ஓ., பணியில் தொடராதது மனுதாரரின் தவறு இல்லை. மனுதாரர் பணி ஓய்வு தேதி வரை தொடர்ச்சியுடன் அதாவது 2019 மார்ச் 31 வரை பணப்பலன்களை பெற தகுதியுடையவர். நிராகரித்த உத்தரவு சட்டவிரோதமானது; ரத்து செய்யப்படுகிறது. ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us