ADDED : செப் 21, 2026 01:39 AM
மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் மூலஸ்தான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.17ல் நடந்தது. அதன் பின் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோயிலுக்குள் பக்தர்கள் அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ள நிலையில், கும்பாபிஷேகத்துக்கு பிந்தைய கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, பக்தர்களின் வசதிக்காக சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், பக்தர்கள் சிலர் கோயிலின் அம்மன், சுவாமி மூலஸ்தான பகுதிகளை அலைபேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது கோயில் நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தடையை மீறி மூலஸ்தான காட்சிகள் எவ்வாறு பகிரப்பட்டது என்பது குறித்து கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
