ADDED : பிப் 27, 2024 07:46 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : இந்திய ரயில்வே ஸ்டேஷன்களை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மதுரை கோட்டம் சோழவந்தான் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தை பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் அர்ப்பணித்தார்.
பா.ஜ., மாவட்ட பொருளாளர் முத்துராம் தலைமை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் முத்தையா முன்னிலை வகித்தார்.
ரயில் பயணிகள் நல சங்க உதவிச் செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார். பிராமணர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், காசி விஸ்வநாதன், நாகேஸ்வரன், பா.ஜ., நிர்வாகிகள் வாசுதேவன், முருகன், ரமேஷ் பங்கேற்றனர். ரயில்வே பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஸ்டேஷன் கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் நன்றி கூறினார்.
