/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வளர்ப்பு நாய் கடித்து காயமுற்ற உரிமையாளர்
/
வளர்ப்பு நாய் கடித்து காயமுற்ற உரிமையாளர்
ADDED : ஜன 29, 2025 05:46 AM
திருமங்கலம் :   திருமங்கலம் மம்சாபுரம் 5வது தெரு கண்ணன் மனைவி ஜான்சிராணி 50. இவர்கள் இரண்டு வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். நாய்களுக்கு மாடியில் தனி அறை அமைத்துள்ளதால் கட்டிப் போடாமல் இருந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை துணிகளை எடுக்க ஜான்சிராணி மாடிக்கு சென்றபோது ஒரு நாய் அவரை கடித்து குதறியது. இதில் அவரது இடது கையின் சதைகள் பிய்ந்து தொங்கின. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற சென்ற போது நாய்க்கு பயந்து யாரும் அருகில் செல்ல முடியவில்லை.
ஒருவழியாக நாயிடம் இருந்த தப்பிய ஜான்சிராணி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வளர்த்த நாயே உரிமையாளரை கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

