ADDED : செப் 16, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஊமச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, கிரீன் டிரஸ்ட் சார்பில் சர்வதேச ஓசோன் தின விழா நடந்தது.
மேலுார் டி.இ.ஓ., கணேசன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை கோமதி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் பேசினார்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். கிரீன் டிரஸ்ட் சார்பில் துணிப்பைகள் வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியை காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
