/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்
/
நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்
நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்
நெல் மூடைகள் தேக்கம்: விவசாயிகள் கலக்கம் லாரிகளால் தாமதம்
ADDED : நவ 07, 2025 04:17 AM

சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை நெல் கொள்முதல் மையத்தில் தேங்கியுள்ள நெல் மூடைகளை விரைந்து எடுத்துச் செல்ல வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இம்மையம் நாச்சிகுளம் செல்லும் ரோட்டருகே உள்ளது. சில நாட்களாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மூடைகளாக கட்டி அடுக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூடைகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
விவசாயி முத்து இருளாயி கூறியதாவது: போதுமான இட வசதியின்றி நெல் மூடைகள் திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ளன. இதனால் வெயில், மழையால் சேதமடைந்து மூடைகளை அதிகாரிகள் திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். லாரிகள் வர தாமதமாவதால் நெல் மூடைகள் தேங்குகின்றன.
இதனால் அறுவடை செய்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை ரோட்டோரம் திறந்தவெளிகளில் கொட்டும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மழையில் இருந்து நெல்லை பாதுகாப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.
தற்போது களம் இருக்கும் இடத்திலேயே அரசு நிலம் உள்ளது.
களத்தை விரிவுபடுத்தி சிமென்ட் தளம் அமைத்து மூடைகளை பாதுகாக்க தகர செட் அமைக்க வேண்டும்.
மேலும் பத்தாயிரம் மூடை நெல் வரவிருப்பதால் லாரிகள் மூலம் தேங்கியுள்ள மூடைகளை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

