/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு பேரையூர் விவசாயிகள் தவிப்பு

ADDED : ஜன 06, 2024 06:12 AM

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழைநீரால் பாதிப்புக்குள்ளாகின.-
பேரையூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இப்பகுதியில் 96 மி.மீ., மழை பதிவானது. பேரையூரை சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் ஓடைகளில் நீர் வரத்து அதிகமாகி கண்மாய்கள் நிரம்பின.
குடிசேரி கண்மாய் நிரம்பி மறுகால் வடிவதால் நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமலும் பயிர்கள் சாய்ந்தன. தண்ணீரில் மூழ்கி கிடப்பதால் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தன. கனமழை பெய்ததால் காட்டுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. வயல்களை தண்ணீர் சூழ்ந்ததால் நெற் பயிர்கள் அழுகி வருகின்றன. சாகுபடிக்கான கடனை எவ்வாறு செலுத்துவது என தெரியாமல் தவிக்கிறோம்'' என்றனர்.