நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுார் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கற்பனை ஓவியங்கள் வரைதல் போட்டிகள் நடந்தன. இதில் மாணவர் கருப்பசாமி 321 ஓவியங்கள் வரைந்து முதலிடம், 150 ஓவியம் வரைந்து மாணவர் இஸ்மாயில் 2ம் இடம், 121 ஓவியம் வரைந்து சபின் அகமது 3ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவி தலைமையாசிரியர் ஜாகிர் உசேன், ஆசிரியர்கள் ரஹ்மத்துல்லா, சண்முகசுந்தரம், அல்ஹாஜ் முகமது, அபுதாஹிர், சலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

