ADDED : நவ 15, 2024 06:11 AM

பாலமேடு: திருச்சியில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 நாட்கள் நடந்தன.
பாலமேடு ஜெராஜ் ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெறும் அவனியாபுரம் சங்கரநாராயணன் பள்ளி, வேலம்மாள் மற்றும் பாலமேடு பத்திரகாளியம்மன், அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
11வயது பிரிவில் தர்ஷன், திபாகர், ஹரிராம் வேல், டிலேஷ் பிரபு, தமிழரசன் சந்திப்வர்மா, அஸ்வின், விஷ்ணு, யோகேஷ், ஸ்ரீ சுதன், சிவ சித்தார்த் வெண்கலமும், 14 வயதில் ஆல்வின் பால், ஜெயஹரிதரன், அனந்த பிரவீன், மோகன் ரூபன்,நிர்மல், அரவிந்தன், சர்வேஷ், ஜவின்பால் வெண்கலமும், 17 வயது கலப்பு பிரிவில் சரவண பாண்டி, தில்லேஷ் வெள்ளி பதக்கமும் வென்று பதக்க பட்டியலில் 90 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்தனர்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்து சங்க செயலாளர் பூஞ்சோலை பதக்கம், கோப்பை வழங்கினார். பயிற்சி அளித்த மதுரை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் செயலாளர் பிரபாகரனை, ஆசிரியர்கள் பாராட்டினர்.