/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை சேதம் பழனிசாமி கண்டனம்
/
அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை சேதம் பழனிசாமி கண்டனம்
அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை சேதம் பழனிசாமி கண்டனம்
அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை சேதம் பழனிசாமி கண்டனம்
ADDED : அக் 07, 2025 04:15 AM

அவனியாபுரம்: மதுரை அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டுக்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி உயர அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. சுற்றி இரும்பு வேலி உண்டு. இதன் கதவை பூட்டாததால் நேற்றுமுன் தினம் இரவு மர்மநபர் எம்.ஜி.ஆர்., சிலை, பீடத்தை சேதப்படுத்தினார்.
நேரில் ஆய்வு செய்த அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் சிலையை சீரமைத்து மரியாதை செலுத்தினர்.
சேதப்படுத்தப்பட்டது குறித்து இளைஞரணி செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேதுராமன், வட்டச் செயலாளர் ஜெயக்கல்யாணி ஆகியோர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் சமரசம் செய்தனர்.
ராஜன் செல்லப்பா கூறுகையில், ''35 ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலை வைக்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்'' என்றார்.