sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மாணிக்கம்பட்டியில் கழிவுநீர் வாடிகாலை மூட துடிக்கும் ஊராட்சி

/

 மாணிக்கம்பட்டியில் கழிவுநீர் வாடிகாலை மூட துடிக்கும் ஊராட்சி

 மாணிக்கம்பட்டியில் கழிவுநீர் வாடிகாலை மூட துடிக்கும் ஊராட்சி

 மாணிக்கம்பட்டியில் கழிவுநீர் வாடிகாலை மூட துடிக்கும் ஊராட்சி


ADDED : பிப் 25, 2026 06:29 AM

Google News

ADDED : பிப் 25, 2026 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றிய மாணிக்கம்பட்டியில் வடிகால் வசதியின்றி தெருக்களில் கழிவுநீர் தேங்கிய நிலையில் வடிகாலை மூட ஊராட்சி நிர்வாகம் மண் கொட்டி உள்ளது.

இக்கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிழக்கு பகுதியில் உள்ள 4 தெருக்கள் வழியாக அப்பகுதி தோப்பில் விடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் உரிமையாளர் தனது பகுதியில் அடைத்து விட்டதால் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லாமல் போனது. இதனால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

சுதாகர்: இங்கு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரம் பாதிக்கிறது. தாழ்வான வீடுகளுக்குள் கழிவுநீர் சென்றதால் மண், ஜல்லி கற்களை கொட்டி வடிகால் மூடப்பட்டுள்ளது. மழை நேரங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்துவிடுகிறது.

வாசல் படிகளை கற்களை வைத்து உயர்த்தினர். பழமையான வீட்டின் சுவர்களும் பாதித்துள்ளன. தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் வெளியேற வடிகால் கட்ட அளவீடு செய்தும் பணியை துவங்கவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள வடிகால்களை மூட ஊராட்சி நிர்வாகம் மண் கொட்டி குவித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us