ADDED : மார் 17, 2024 05:46 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சித்தாலை ஊராட்சி ஒன்றியம் கிழக்கு தெருவில் குடிநீர் கலங்கலாக சாக்கடை நீர் கலந்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்து இ.கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, மாநில குழு உறுப்பினர் நாகஜோதி, கிராம மக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ., சாந்தி பேச்சு வார்த்தை நடத்தினார்.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து குழாய்களை சீரமைக்கும் வரை கிராம மக்களுக்கு லாரியில் தண்ணீர் விட வேண்டும் எனவும், அந்த பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டிற்கான இடத்தை புதன்கிழமைக்குள் முறையாக அளந்து ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். தாசில்தார் மனேஷ்குமார் உடனிருந்தார்.

