/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரண்டாவது ஆசிரியராக பெற்றோர் இருக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு
/
இரண்டாவது ஆசிரியராக பெற்றோர் இருக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு
இரண்டாவது ஆசிரியராக பெற்றோர் இருக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு
இரண்டாவது ஆசிரியராக பெற்றோர் இருக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு
ADDED : ஜன 30, 2024 07:23 AM

மதுரை, : மாணவர்களின் இரண்டாவது ஆசிரியராக ஒவ்வொரு பெற்றோரும் இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் மகேஷ் வலியுறுத்தினார்.
மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் மருத்துவமனை வளாகத்தில் கல்வித்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக (பி.டி.ஏ.,) மண்டல மாநாட்டை அமைச்சர் உதயநிதி காணொலியில் துவக்கி வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி, துறை செயலர் குமரகுருபரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ., துணைத் தலைவர் முத்துக்குமார் வரவேற்றார். இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜமுருகன், கலெக்டர் சங்கீதா, துணை இயக்குநர்கள் ஆஞ்சலோ இருதயசாமி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகேஷ் பேசியதாவது: ஆசிரியர்களும் பெற்றோரும் சேர்ந்து தான் நல்ல மாணவரை உருவாக்க முடியும். அறிவுசார்ந்த குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றால் பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனையுடன் கல்வித்துறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மூலம் ஏராளமான மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அரசின் திட்டங்களும், பெற்றோர்களின் ஒத்துழைப்புமே காரணம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டாம் ஆசிரியராக இருக்க வேண்டும். காமராஜர் ஆட்சி போல பள்ளி சீரமைப்பு திட்டங்களை தி.மு.க., நிறைவேற்றி வருகிறது என்றார்.
ஓய்வு எஸ்.பி., கலியமூர்த்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். 117 நன்கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சி.இ.ஓ., கார்த்திகா நன்றி கூறினார்.