/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபத்துாணில் தீபம் ஏற்ற கருதும் கட்சிகள் அ.தி.மு.க.,வுடன் வரணும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேட்டி

ADDED : டிச 29, 2025 05:16 AM
திருப்பரங்குன்றம்: ''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வேண்டும்'' என மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பார்த்து, முதல்வர் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க., வை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் இக்கூட்டணி செயல்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பாலியல் சம்பவம், போதை கலாசாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் தி.மு.க., அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு. அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று பழனிசாமி கூறுகிறார். காரணம், வீட்டுவரி, சொத்து வரியையும், கல்விக் கட்டணத்தையும்கூட தி.மு.க., அரசு விட்டு வைக்காததால்தான்.
. தி.மு.க., கூட்டணி வலுவிழுந்து உள்ளது. மக்களை ஏமாற்றி போலி திராவிட மாடலை ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அவரை வீட்டுக்கு அனுப்பும் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கருத்து கொண்ட கட்சிகள் அ.தி.மு.க., பக்கம் வரவேண்டும் என்றார்.