/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் டோல்கேட்டால் பயணிகளுக்கு சோதனை
/
கப்பலுார் டோல்கேட்டால் பயணிகளுக்கு சோதனை
ADDED : செப் 27, 2024 06:52 AM
திருமங்கலம்: கப்பலுாரில் விதிமுறைகளை மீறி அமைந்துள்ள டோல்கேட்டில் அரசு பஸ் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
சிவகாசி டிப்போவைச் சேர்ந்த அரசு பஸ் நேற்று காலை மாட்டுத்தாவணி செல்ல மதியம் 12:00 மணிக்கு கப்பலுார் டோல்கேட் வந்தது. பாஸ்ட் ட்ராக் கணக்கில் பணம் இல்லாததால் பஸ்சை அனுமதிக்க டோல்கேட் ஊழியர்கள் மறுத்தனர்.
இதையடுத்து 40க்கும் மேற்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் செல்ல இறங்கி நின்றனர்.
இவர்களில் மாட்டுத்தாவணி, ரிங் ரோட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் பலர் இருந்தனர்.
இந்நிலையில் டிப்போ அலுவலர்கள் பஸ்சுக்கு ரீசார்ஜ் செய்து விட்டதால் 20 நிமிடம் தாமதமாக அதே பஸ்சில் பயணிகள் ஏறி மதுரை சென்றனர். இதனால் அவசர வேலையாக சென்றவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். பஸ்சுக்கு முறையாக ரீசார்ஜ் செய்யாத அலுவலர்கள், தினசரி அதே வழியில் பலமுறை சென்று வரும் பஸ்களையும் விட மறுக்கும் டோல்கேட் ஊழியர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.