தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆபத்தான நிழற்குடை அச்சத்தில் பயணிகள்

 ஆபத்தான நிழற்குடை அச்சத்தில் பயணிகள்

 ஆபத்தான நிழற்குடை அச்சத்தில் பயணிகள்


ADDED : ஜூன் 17, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: திருவேடகத்தில் மதுரை மெயின் ரோட்டில் தர்ஹா அமைந்துள்ளது. இதனருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிழற்குடை தற்போது பாழடைந்து ஆபத்தான நிலையிலுள்ளது.

பல இடங்களில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. ஜன்னல்கள், 'சிமென்ட்' இருக்கைகள் உடைந்து காயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எப்போதும் விழுந்து விடலாம் எனும் நிலையில் உள்ளது.

செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறிவிட்டது. அதிக அளவில் மண் சேர்ந்ததால் குவிந்து மூடும் நிலையில் உள்ளது.தினமும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வருகின்றனர். நிழற்குடைக்குள் ஒதுங்க அஞ்சி வெயில், மழைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். விபரீதம் விளையுமுன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us