தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

 பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

 பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி


ADDED : மே 19, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்தும் இடங்களில் டூவீலர்களால் பஸ்களும், காத்திருக்கும் பகுதியில் கடைகளால் பயணிகளும் அவதிப்படுகின்றனர்.

மதுரையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்கின்றன.

இப்பகுதி கிராமங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தும் பஸ்களை கடந்து தான், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை வாகனங்கள் செல்ல வேண்டும்.

பிஸியாக இருக்கும் இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்த வேண்டிய 'டிராக்' குகளில் டூவீலர்கள், கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பயணிகள் காத்திருக்கும் பகுதி வரை கடைகள் உள்ளன. பஸ் ஸ்டாப்பிலும் சிலர் கடைகளை விரித்து வியாபாரம் செய்கின்றனர்.

இருக்கை வசதி இல்லாத பஸ் ஸ்டாப்பில் வெயில், மழைக்கு பயணிகள் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us