ADDED : அக் 23, 2025 04:05 AM
மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் குறைதீர் கூட்டம் நவ.,12 ல் காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இக்குறைதீர் கூட்டம் நடைபெறும்.
கடந்த மார்ச் 31க்கு முன்பு பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து தற்போது வரை நிலுவையில் உள்ளவர்கள் இதில் நவ.,4 க்குள் மனு கொடுக்கலாம். மனுவில் விண்ணப்ப எண், அலைபேசி எண், இமெயில் விவரமும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தின் உறை மீது பாஸ்போர்ட் அதாலத்- நவம்பர் 2025 என குறிப்பிட்டு, 'மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலா ரோடு, ரேஸ்கோர்ஸ், மதுரை- 625 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதன் பிரதியை rpo.madurai@mea.gov.in என்ற இமெயில் முகவரிக்கு பாஸ்போர்ட் அதாலத் நவம்பர் 2025 என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். நவ.,4க்கு முன் அனுப்பப்படும் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.