UPDATED : அக் 16, 2026 07:20 PM
ADDED : அக் 16, 2026 07:16 PM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் தேமடைந்த ரோடுகள் ரூ.120.29 கோடியில் மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2025-–26ம் ஆண்டில் 1,169 ரோடுகள் 169.43 கி.மீ., நீளத்திற்கு சேதமடைந்தது கண்டறியப்பட்டது. இந்த ரோடுகள் தற்போது ரூ.120.29 கோடியில் மறுசீரமைப்பு செய்து புதிதாக அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
தற்போது வரை 1,032 ரோடுகள் 148.82 கி.மீ., நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 137 ரோடுகள், 20.61 கி.மீ., நீளத்தில் நடக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 746 இடங்களில் ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து அதிகம் உள்ள ரோடுகளில் ஏற்பட்டுள்ள 902 பழுதுகளை பருவமழைக்கு முன் சீரமைக்க ரூ.1 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரத்திற்கு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. அக். 23ல் இதற்கான டெண்டர் நடக்கிறது. அதன் பின் மாநகராட்சி ரோடுகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.
