/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்
/
சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்
சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்
சுகாதார நிலையத்தில் குடிநீரில்லை குமுறும் நோயாளிகள்
ADDED : ஜன 28, 2025 05:47 AM

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளானதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
கருங்காலக்குடி வட்டாரத்தில் திருச்சுனை, கம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தலைமை மருத்துவமனையாக கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.
இங்கு வருவோரின் பயன்பாட்டிற்காக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தொட்டி அமைத்து, குன்னங்குடி பட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. சிலமாதங்களாக குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக் தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது.
நோயாளிகள் கூறியதாவது: 4 வழிச்சாலையில் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டிய போது குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சரி செய்யாததால் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் கூறுகையில், மருத்துவமனை போர்வெல்லில் உப்பு தண்ணீராக உள்ளதால் குடிநீர் இணைப்பு கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளேன் என்றார்.

