ADDED : ஆக 03, 2025 05:05 AM

மதுரை : மதுரையில் நடந்த 28வது எல்.ஐ.சி., பென்ஷனர்கள் சங்க கோட்ட மாநாட்டிற்கு தலைவர் கோபாலக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மூத்த பென்ஷனர்கள் கவுரவிக்கப்பட்ட னர். பொருளாளர் மகா லிங்கம் வரவுசெலவு கணக்கை சமர்ப்பித்தார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்க துணைத்தலைவர் புண் ணியமூர்த்தி பேசியதாவது:
பென்ஷன் ஒவ்வொரு ஊதிய உயர்விலும் மாற்றி யமைக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கினால் கூட ரூ.64 ஆயிரம் கோடி தான் வரும். இது நமது ஜி.டி.பி.யில் 12 சதவீதம் மட்டுமே. அனைவருக்கும் பென்ஷன் திட்டம் கேரள அரசு நிறைவேற்றியிருக்கிறது. நாடு முழுவதும் இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல், பென்ஷன் உயர்வு உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், எல்.ஐ.சி., அதிகாரிகள் சங்க செயலாளர் சுப்பிர மணியன், வளர்ச்சி அதி காரிகள் சங்க பொதுச் செயலாளர் அருண்குமார், காப்பீடு கழக ஊழியர் சங்க தலைவர் சுரேஷ்குமார், பொது இன்சூரன்ஸ் பென்ஷனர் சங்க செயலாளர் ராமநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செல்வராஜ் நன்றி கூறினார்.