ADDED : ஆக 24, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்டக்கிளை கூட்டம் நடந்தது. தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் பரமசிவம் வரவேற்றார். பொருளாளர் ஜீவானந்தம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
தென்மண்டல தலைமை பொறியாளர்(பொறுப்பு) கணேஷ் ஆண்டு மலரை வெளியிட்டார். கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் கருணாகரன் பேசினர். அரசு அறிவித்த தேதியில் அகவிலைப்படிஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மூத்த ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.கிளை செயலாளர் பஷீர் அகமது நன்றி கூறினார்.