நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஓய்வுபெற்ற வேளாண்மை பொறியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினவிழா நடந்தது.
நிர்வாகி சிவக்குமார் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் கண்ணன், பொதுச்செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தனர். முதியோருக்கு ஏற்படும் பக்கவாதம் குறித்து மூளை நரம்பியல் சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் சுரேந்திரன், பிரித்விராஜ், சந்திரசேகர், பிற அமைப்பு நிர்வாகிகள் போஸ், மகாலிங்கம், மதுரை மாவட்ட கருவூல அலுவலர் புனிதாராணி கலந்து கொண்டனர்.

