ADDED : பிப் 15, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு வழங்கிய போனஸ் தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என, வீட்டுவசதி வாரிய ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி ஆறுமுகம் வரவேற்றார். ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு மீண்டும் போனஸ் தொகையை வழங்க வேண்டும். ஈமச்சடங்குகளுக்கு ரூ.5 ஆயிரம் தந்து உதவுவது, வீட்டுவசதி வாரிய சமூக கூடத்தில் சுபகாரியங்கள் நடத்த சலுகையில் வாடகைக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்.

