ADDED : பிப் 14, 2024 05:32 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் அமைப்பு தின விழா நடந்தது.
மாவட்ட தலைவர் நாகையன் தலைமை வகித்தார். செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் மகிமைஜோசப், துணைத் தலைவர் மணி, சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துமாடன் உட்பட பலர் பேசினர். நிர்வாகிகள் பாண்டி, கருப்பையா, நாகலிங்கம் பங்கேற்றனர். இலவச மருத்துவ முகாம் நடந்தது.
