ADDED : ஏப் 16, 2026 10:35 PM
மதுரை: மதுரை பீ.பி.குளம் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகத்தில், அகவிலைப்படியை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வின் சத்தியராஜ், பி.எஸ்.என்.எல்., டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்க(இந்தியா) செயலாளர் பிலாவடியான், சென்சார் நிகாம் ஓய்வூதியர் நலச்சங்கம் செயலாளர் கணேசன், தொ.மு.ச., பென்ஷனர் சங்கம் செல்லபாண்டியன் பேசினர்.
2026 ஜன. 1 முதல் முடக்கி வைக்கப்படும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். பிப். 27ல் பொதுத்துறை வழங்கிய திருத்தப்பட்ட தொழிற்சாலை அகவிலைப்படி உத்தரவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அகவிலைப்படி வழங்காவிடில் ஏப். 30ல் பொது மேலாளர் அலுவலகம் முன் முழு நேர தர்ணா நடத்த தீர்மானித்தனர்.
